20.04.2025 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய நேரம் 13:00 பி.பகல் நாகேஸ்வரா மக்கள் அமைப்பு பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளோம். இக்கூட்டத்தின் பிரதான நோக்கம் புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்ற நாகேஸ்வரா உறவுகள் அனைவரது கருத்துக்களையும் உள்வாங்கி ஆராய்ந்து தொடர்ந்து எமது அமைப்பு பயணிக்க ஏற்புடைய கருத்துக்களை எடுத்து பயணிப்பதே எமது நாகேஸ்வரா மக்கள் அமைப்பு நிர்வாகத்தினரின் ஆசையாகும்.
எனவே அன்பார்ந்த நாகேஸ்வரா உறவுகளே கொஞ்சம் சிந்தியுங்கள்! எமது நாகேஸ்வரா மக்கள் அமைப்பானது பக்க சார்பற்ற ஒரு அமைப்பு யாருக்கும் விலை போகாமல் துணிந்து நின்று செயல்படும் ஒரு அமைப்பு நீங்கள் அனைவரும் உங்களுடைய பங்களிப்புக்களை செய்து மென் மேலும் எமது நாகேஸ்வரா மக்கள் அமைப்பை முன்னோக்கி செல்ல உறுதுணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணிப்போம்
நிகழ்ச்சி நிரல்.
அ.இறைவணக்கம்.
ஆ.தலைவர் உரை.
இ.எதிர்கால திட்டமிடல்.
ஈ .120 நிமிடங்களில் கூட்டம் நிறைவு பெற
முயற்சிப்போம்.
பொதுக்கூட்டம் WhatsApp அல்லது Zoom வழியாக நடைபெறும்
எமது WhatsApp குழுமத்தில் இல்லாத உறவுகள் நிர்வாக உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு உங்களுடைய பெயர்,கைபேசி இலக்கத்தை கொடுத்தால் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்
நாகரீகம் என்பது மிக,மிக அவசியம்.மீறும் நபரை கூட்டத்தில் இருந்து நீக்கிவிடுவோம் என்பதை பணிவன்புடன் அறியத் தருகின்றோம்.
மாற்றம் ஏதும் இருப்பின் பின்னர் அறியத் தருகின்றோம்
நன்றி.