புலம்பெயர் நாகேஸ்வரா உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
வருகின்ற 02.03.2025 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய நேரம் மு.பகல் 11.00 மணிக்கு
நாகேஸ்வரா மக்கள் அமைப்பின் யாப்பு சம்மந்தமான பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதனால் புலம்பெயர் தேசத்தில் வாழும் நாகேஸ்வரா மக்கள் அனைவரும் தவறாது சமூகம் தருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். இக்கூட்டத்தின் பிரதான நோக்கம் நாகேஸ்வரா மக்கள் அமைப்புக்கு யாப்பு தயாரித்து அதனை மக்களின் பார்வைக்காக பதிவிட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியுள்ளது.
எனவே புலம்பெயர் வாழ் நாகேஸ்வரா உறவுகளே
யாப்பு பற்றி கதைப்பதற்கான பொதுக்கூட்டமே அனைவரும் நடைபெறும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உங்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
யாப்பு சீர்திருத்தம் பற்றி மட்டுமே கதைக்கப் படும் என்பதை அறியத் தருகின்றோம்
பொதுக்கூட்டம் WhatsApp வழியாக நடைபெறும்
பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் எமது தளத்தில் எழுதியோ அல்லது எமது நிர்வாக உறுப்பினர்களிடம் தொடர்பு கொண்டு கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்
யாப்பு நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு வாக்களிப்பவர்கள் எமது அமைப்பில் அங்கத்தவராக இருந்தால் மட்டுமே வாக்களிக்க தகுதியுடையவராக கருதப்படும்
மாற்றம் ஏதும் இருப்பின் அறியத் தருகின்றோம்
இதுவரை அங்கத்தவராக இணையாமல் இருக்கும் எமது உறவுகள் படிவத்தை பூர்த்தி செய்த பின்னர் எமது அமைப்பின் மின்னஞ்சலுக்கு அனுப்பி எமது அமைப்பை மென் மேலும் வளர்ச்சி பெற நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்
பூர்த்தி செய்ய வேண்டிய படிவம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது
White And Blue Gradient Modern Invoice.pdf
நன்றி.