நாகேஸ்வரா அமைப்புருவாக்கம்
லண்டன் மற்றும் ஏனைய நாடுகளில் உள்ள புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது.
நாகேஸ்வரா மக்கள் அமைப்பு என்பது புலம்பெயர் தேசம் எங்கும் உள்ள நாகேஸ்வரா மக்களை இணைத்து இங்கிலாந்து குடியுரிமை சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பு, அதனைச் சேர்ந்த மக்களின் நலன் மற்றும் சமூக மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கி வருகிறது.நாகேஸ்வரா மக்கள் அமைப்பு நாகர்கோவிலின் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நலனை முன்னெடுக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட அமைப்பாகும். இவ்வமைப்பு கல்வி, பண்பாடு, நலன்சார் உதவிகள் மற்றும் சமூக சேவைகள் போன்ற பல துறைகளில் சேவைகளை வழங்கி வருகின்றது.
நாகேஸ்வரா மக்கள் அமைப்பு தனது உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இவ்வமைப்பு சமூக சமரசம், கல்வி மேம்பாடு மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தின் வளர்ச்சி ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
நாகேஸ்வரா மக்கள் அமைப்பானது 2022 ஆம் ஆண்டில் புலம்பெயர் நாகேஸ்வரா மக்களின் ஒருங்கிணைப்பால் உருவாக்கப்பட்டது.
நாகேஸ்வரா அமைப்புருவாக்கம்
லண்டன் மற்றும் ஏனைய நாடுகளில் உள்ள புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது.
யாப்பு உருவாக்கம்
அனைத்து அங்கத்தவர்களின் கலந்துரையாடலின் நிமித்தம் யாப்பொன்று உருவாக்கப்பட்டது.
எமது எதிர்கால குறிக்கோள்
மேலும் பல அங்கத்தவர்களின் ஆதரவுடன் நாகேஸ்வரா அமைப்பின் வளர்ச்சியை எதிர்பார்க்கின்றோம்.
நாகேஸ்வரா மக்கள் அமைப்பின் நிர்வாகிகள், சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் முனைப்புடன், அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறார்கள்.