நாகேஸ்வரா உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
இன்றைய தினம் (20.04.2025) எமது நாகேஸ்வரா மக்கள் அமைப்பினால் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் அண்ணளவாக 17பேருக்கு மேலதிகமானோர் கலந்து கொண்டனர். முக்கியமாக பூர்வீக நாகதம்பிரான் ஆலய பத்தாம் திருவிழாவை ஒற்றுமையாக எப்படி நடத்துவது என்றும்,அதற்கு ஊரில் வாழும் மக்களோடு கதைத்து நல்லதொரு முடிவு எடுப்பது ஆரோக்கியமாக இருக்கும் என்று கதைக்கப் பட்டுள்ளது.
அத்தோடு வெளிநாட்டில வாழும் புலம்பெயர் உறவுகள் பத்தாம் திருவிழாவிற்கான நிதியினை நாகேஸ்வரா மக்கள் அமைப்பு ஊடாக பணத்தினை கொடுத்தால் எதிர்காலத்தில் சிக்கல்களை தவிர்க்கலாம் என்றும் கூறப் பட்டுள்ளது.
மேலும் நாட்சீட்டு சம்மாட்டி என்பவர் மக்களுக்கானவர் மக்களோடு கதைத்து பேசி மக்களின் கருத்துக்களை மதித்து நடக்க வேண்டிய ஒரு மனிதராக இருக்க வேண்டும். அப்படி மக்களின் கருத்துக்களை செவிமடக்காது தன்னிச்சையாக செயற்படும் சம்மாட்டியினருக்கு இனிவரும் காலங்களில் என்ன செய்யலாம் என்பதை மக்கள் நல்லதொரு தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என வலியுறத்தப் பட்டு
மேலும் வருகின்ற புக்கார விமானத் தாக்குதலில் பலியான மாணவச் செல்வங்களின் நினைவு தினத்தை சிறப்பாக செய்வதாகவும் கருத்து முன்வைக்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுற்றது.
இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் புலம்பெயர் தேசத்தில் நூற்றுக் மேற்பட்ட நாகேஸ்வரா உறவுகள் இருந்தும் ஒரு குறுகியது மக்கள்தான் நடைபெறும் அனைத்து பொதுக்கூட்டங்களிலும் பங்குபற்றுவது வாடிக்கையாகவுள்ளது
மற்றவர்கள் ஏன் வேடிக்கை பாற்கின்றீர்கள்? உங்களுக்கு பயமா? அல்லது ஊர் மீது அக்கறை இல்லையா? அல்லது பொது விஷயத்தில் கதைத்தால் குடும்பங்களை பற்றி எழுதிவிடுவார்கள் என்ற அச்சமா…? இப்படி எல்லாத்துக்கும் பயந்து,பயந்து வாழ்வதை விட?????
மகிழ்ச்சியான செய்தி எமது நாகேஸ்வரா மக்கள் அமைப்புக்கான இணையத் தளம் உருவாக்கியுள்ளோம்
👇
https://nageswaramakkalamaippu.com/
நன்றி.
ம.சி.மோகன்.
செயலாளர்.
நாகேஸ்வரா மக்கள் அமைப்பு.